Showing posts with label சிரிப்பா சிரிங்க. Show all posts
Showing posts with label சிரிப்பா சிரிங்க. Show all posts

Tuesday, December 04, 2007

Star8. 3 ஜோக்ஸ் - 2 சைவம் 1 அசைவம்!

நண்பர்களே,

இதற்கு முன் ஒரு 7 சீரியஸான பதிவுகள் இட்டேன். எனவே, நீங்க கொஞ்சம் relax ஆகிக்க இந்த ஜாலிப் பதிவு :)

A ஜோக் படிக்க விரும்பாதவங்க, முதல் இரண்டை வாசித்து விட்டு அப்பீட் ஆகவும் ;-)

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார்.

வழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி, "திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?"

மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிருந்தே உன்னைத் தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும்!" என்றார்.

மூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார்! எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, "திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார்!

அதற்கு அம்மூதாட்டி,"ஏன், ரமேஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமல், வக்கீலாகி விட்டவன்! அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி!?!" என்று கூறியதில் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்!

அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார் :)
************************************

குடி குடியைக் கெடுக்காது!

ஒரு கணவர் கூறுகிறார்:

முந்தைய நாள் அதிகம் குடித்ததால், பயங்கரத் தலைவலியுடன் ஒரு நாள் காலை கண் விழித்தேன். படுக்கைக்கு அருகே, 2 ஆஸ்பிரின் மாத்திரைகளும், குளிர்ந்த நீரும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்! அத்துடன், சலவை செய்யப்பட்ட எனது மாற்றுத் துணிகள் டேபிளில் இருப்பதையும் கண்டேன்! எனது அறையும் ஒழுங்காக்கப்பட்டு மிக சுத்தமாக இருந்தது! மொத்த வீடுமே படு சுத்தமாக இருந்தது!

மாத்திரைகளை விழுங்கும்போது, டேபிளில் ஒரு குறிப்பைப் பார்த்தேன்: "டார்லிங், உங்கள் காலை உணவு அடுப்பின் மேல் சூடாகவே இருக்கும், சாப்பிடுங்கள், நான் ஷாப்பிங் செல்கிறேன், ஐ லவ் யூ"

சமையலறைக்குச் சென்றால், என் மனைவியின் குறிப்பு சொன்னது போலவே, சூடான காலை உணவோடு, பத்திரிகையும் தயாராகவே இருந்தது.

என் மகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். என் மகனைப் பார்த்து, "நேற்று இரவு என்ன தான் நடந்தது?" என்று வினவினேன்.

என் மகன், "அப்பா, நீங்கள் அதிகாலை 3 மணிக்கு மிக அதிகமான போதையில் வீட்டுக்கு வந்தீர்கள், நாற்காலியை உடைத்தீர்கள், கூடத்திலேயே வாந்தி எடுத்தீர்கள், தடுமாறி கதவின் மீது மோதி நெற்றியில் அடிபட்டுக் கொண்டீர்கள்!" என்றான்.

குழப்பத்தின் உச்சத்துக்குச் சென்ற நான், "பின் எப்படி வீடே அலம்பி விட்டது போல சுத்தமாகவும், என் காலை உணவு தயாராகவும் உள்ளது ? நியாயமாக, என்னுடன் பெரிய சச்சரவுக்கு அல்லவா உன் அம்மா தயாராக இருந்திருக்க வேண்டும் ?" என்றேன்.

என் மகன் அமைதியாக, "அப்பா, நேற்றிரவு அம்மா உங்களை தரதரவென்று படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, உங்கள் உடைகளையும், காலணிகளையும் களைந்தபோது, நீங்கள், 'விடு என்னை, நான் திருமணமானவன், என் மனைவியை மிகவும் நேசிப்பவன்' என்றீர்கள்" என்றான் !!!!!!!!
*****************************

மன்மத மருத்துவம்!

ஒரு மனைவி ஒரு ஹிப்னாடிஸ்ட் வகை மருத்துவ நிபுணரிடம் சென்று விட்டுத் திரும்பிய பின் தன் கனவனிடம் கூறுகிறாள்: இவ்வளவு வருடங்களாக என்னை வாட்டிய ஒற்றைத் தலைவலி பிரச்சினை தீர்ந்தது!
கணவன்: எப்படி அந்த அதிசயம் ?
மனைவி: என் தோழி ஒருத்தி பரிந்துரைத்த ஹிப்னாடிஸ்ட் மருத்துவ நிபுணரிடம் இரண்டு மாதங்களுக்கு முன் சென்றேன். அவர் ஒரு தீர்வு கூறினார், அதாவது, தினமும் இரு முறை கண்ணாடி முன் நின்று, "எனக்குத் தலைவலி இல்லை" என்று தொடர்ந்து 5 நிமிடங்கள் சொல்லுமாறு அந்த நிபுணர் கூறினார். என் தலைவலி போயே போயிந்தி!
கணவன்: சரி தான், பெரிய ஆள் தான் அந்த ஹிப்னாடிக் டாக்டர்!
மனைவி: நீங்கள் கூட இப்போதெல்லாம் படுக்கையில் சீக்கிரமே சோர்ந்து விடுகிறீர்கள் ?!? நீங்களும் ஒரு முறை சென்று அந்த ஹிப்னாடிஸ்ட்டை பார்க்கலாமே ?

கணவனும், மனைவி சொன்னதற்காக, அந்த ஹிப்னாடிஸ்ட்டை சந்தித்து விட்டு வந்தார்! வீட்டுக்கு வந்த கணமே, மனைவியை படுக்கை அறைக்கு தூக்கிச் சென்று கிடத்தி விட்டு, "இரு, இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு, பாத்ரூமுக்குச் சென்று சில நிமிடங்களில் திரும்பியவர் மனைவிக்கு வரலாறு காணா இன்பம் (சிற்றின்பம் தாங்க:)) வழங்கினார்!!! மனைவியோ "ஐயோ, என்னவொரு மாற்றம் ?" என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போய் விட்டார்!

கணவர் மறுபடியும் "இரு, இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு, பாத்ரூமுக்குச் சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்து, இரண்டாவது ரவுண்டை முதலாவதை விட சிறப்பாக ஆடினார் :) மனைவிக்கோ தலை கிறுகிறுத்து விட்டது!

கணவர் மறுபடியும் "இரு, இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு, பாத்ரூமுக்குச் சென்றார்! கணவருக்குத் தெரியாமல் அவரை மெதுவாக பின்தொடர்ந்து மனைவி பாத்ரூமுக்குச் சென்று பார்த்தார். அங்கே கணவர் கண்ணாடி முன் நின்றபடி கூறிக் கொண்டிருந்தார்:
"அவள் என் மனைவியில்லை, அவள் என் மனைவியில்லை, அவள் என் மனைவியில்லை!"
***********************************

என்ன மக்களே, என்சாய் பண்ணீங்களா :)))))))))))))

எ.அ.பாலா

Friday, February 09, 2007

295. சொன்னதும் சொல்லாமல் விட்டதும் - 1

1 ) தி.க. தலைவர் வீரமணி

சொன்னது :
ஆனால் தி மு க அரசில் மூத்த அமைச்சராக இருக்கிற துரை முருகன் " முன்கூட்டியே எதையும் தெரிந்து கொள்கிற சக்தி படைத்தவர் பாபா .தன் சக்தியால் மோதிரம் வரவழைத்து எனக்கு தந்தார் என்பதுதான் நகைப்புக்கு இடம் தரக் கூடியது.மேஜிக் காட்சியை கடவுளின் அனுக்கிரகம் என்று சொல்வதை கலைஞரின் சர்க்காரில் அமைச்சராக இருக்கும் ஒருவரே பாராட்டுவது வேதனையாக இருக்கிறது

சொல்லாமல் விட்டது :
இதுக்கு பதிலா இவரும் பாபா காலிலேயே விழுந்திருக்கலாம்..வேட்டி தடுக்கி விழுந்துட்டாருன்னு சொல்லியாவது சமாளிச்சிருப்போம்

2 ) தமிழக அமைச்சர் துரை முருகன்

சொன்னது :
பாபா தனது சக்தியால் மோதிரம் வர வழைத்து எனக்கும் தயாநிதி மாறனுக்கும் மட்டும் தந்தார்

சொல்லாமல் விட்டது :
நல்ல வேளை...தயாநிதி மாறனுக்கும் தந்துட்டாரு..நா தனியா மாட்டியிருந்தா இதை வச்சே நம்ம அமைச்சர் பதவியை காலி பண்ணினாலும் பண்ணிருவாங்க.


3 ) முதலமைச்சர் கருணாநிதி

சொன்னது :
வானத்தை கிழித்து பொற்காசுகளை வாரி கொட்டிக் கொடுத்தாலும் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

சொல்லாமல் விட்டது :
எந்தெந்தக் கொள்கைகளை அப்படீன்னு யாரும் கேக்காத வரைக்கும் சரி.


4 ) பாக் அதிபர் முஷாரப்

சொன்னது:
காஷ்மீர் பிரச்சினைக்கு வன்முறை மூலமே தீர்வு காண முடியும் என நம்புகிரவர்களை எங்களுடன் சேர்க்க மாட்டோம்

சொல்லாமல் விட்டது :
அவங்க கையில துப்பாக்கியும், வெடிகுண்டும் குடுத்து இந்தியாவுக்குள்ள அனுப்பிருவோம்


இன்னும் இது போல நிறைய இருக்கு. Later :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 295 ***

Friday, December 08, 2006

Warning ! Hazardous Material

இதைப் பிரசுரிப்பதால், பெண்ணியவாதிகள் என்னை கண்ணியமற்றவன் என்று எண்ண வேண்டாம் !!! Please take it in good humour and please do not come knocking at my door, with brick bats :))) வேண்டுமானால், இந்த 'data sheet'-ஐ எழுதியவரைக் கண்டுபிடித்து உங்கள் முன் ஆஜர்படுத்த ஆவன செய்கிறேன் !

Photobucket - Video and Image Hosting

எ.அ.பாலா

### 268 ###

Tuesday, August 22, 2006

+/- குத்து, பின்னூட்டம், பதிவுத்தலைப்பு - Jolly Tips

************************
தமிழ்மணம் '+/-' ரேட்டிங் வசதியை வழங்கியது, பதிவர்கள் வாசிக்கத்தக்க பதிவுகளை பரிந்துரைப்பதற்காக என்பது என் எண்ணம். ஆனால், அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது ? தங்களுக்கு ஒவ்வாத கருத்துக்கள் உடைய பதிவுகளுக்கு '-' போட்டு, அப்பதிவுகள் பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் பட்டியலில் வராமல் பார்த்துக் கொள்வதில் போய் முடிகிறது !!! பதிவரின் கருத்துக்கள் விவாதத்திற்குரியவை என்றால், தங்களது எதிர்கருத்துக்களை பின்னூட்டமாக இடலாமே ! ஜனநாயகத்தில் விவாதம் அவசியமானது இல்லையா ? அதை விடுத்து "-" போட்டுத் தாக்குவது சரியில்லை.

தனிமனிதத் தாக்குதல் / வசைகள் / அருவருக்கத்தக்க கருத்துக்கள் கொண்ட பதிவுகளுக்கு, வாசகர் கண்டிப்பாக '-' இட்டு, கண்டனத்தை தெரிவித்தால் நல்லது. அத்தகைய பதிவுகளை பின்னுட்டமிடாமல் நிராகரித்தாலே போதும். பதிவர் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன் ! ஊக்கமளிப்பதால் தான் பிரச்சினைகள் பூதாகரமாகின்றன.

புதிதாக வரும் பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களைஊக்குவிக்கலாம். அவர்கள் மேலும் சிறப்பாக எழுத அது உதவும்.

சீரியஸ் மேட்டர் முடிந்தது, இப்ப கொஞ்சம் ஜாலியா சில கருத்துக்கள் :)

1. ஒரு பதிவை படிச்சுட்டு, ஒண்ணுமே தோணலன்னா, பதிவை மறுபடியும் வாசியுங்கள், ஏதாவது உள்குத்து இருந்தா புரிய வாய்ப்பிருக்கு ! பதிவின் தலைப்பை நன்றாக உள்வாங்கிக் கொள்ளுங்கள் ! அப்படியும் புரியலன்னா, நீங்க ஒரு வெண்குழல் விளக்கு தான் :) அல்லது வலைப்பதிவுலகம் பற்றி சரியா இன்னும் தெளியலேன்னு அர்த்தம் ! தெரிந்தோ தெரியாமலோ, சக வலைப்பதிவர் ஏதாவது சொல்லி ஏடாகூடமாக மாட்டினார்னா, உடனே அவரை "இது நியாயமா, தர்மமா, அடுக்குமா?" என்று கேள்வி கேட்டு ஒரு பதிவு போடுங்கள் ! உடனே, பதிவைச் சுத்தி கூட்டம் அம்மும் :) இது தான், இப்ப லேட்டஸ்ட் டிரெண்ட் ;-)

2. உங்களோட கூட்டாளியோட பதிவாயிருந்தால், "சூப்பர் மாமூ" அல்லது "கலக்கிட்டியே சந்துரு" என்று போட்டு கீழே "நமீதா ரசிகர் மன்றம்" அல்லது "சிம்ரன் ஆப்பக்கடை, துபாய்" (பதிவுக்கு சம்பந்தமா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை!) என்று குறிப்பிடுங்கள்.அலம்பல் செய்வதற்கென்றே அலைந்து கொண்டிருக்கும் அனானிக் கூட்டம் will take over :) "நீ உருப்பட மாட்டே", "நீ மட்டும் உருப்படுவியா?", "நான் உருப்பட்டாலும், நீ உருப்படவே மாட்டே", என்று பலவிதமான பெயர்களில் (தலையெழுத்துப் பிழை, சனீஸ்வர குய்ராலா, நாதாரி, கபோதி, சொர்ணமால்யா, புலிகேசி ....) அனானிகள் தொடர்ந்து பின்னூட்டி, உங்கள் பதிவு, "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் டாப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்வர் ;-)

3. பதிவின் தலைப்பில், வள்வள், கழிவு, கேவலம், ஜொள்ளு, கருப்பு, பாப்பான், போலி, டோண்டு போன்ற சொற்கள் இருந்தா, வாசகரை சும்மா காந்தம் மாதிரி பதிவு பக்கம் இழுக்கலாம் ;-) நெறய பின்னூட்டங்களும் கிடைக்கும், பிளாக் கவுண்டர் (Blog counter) வச்சிருந்தா பிச்சுக்கிட்டு ஓடும்
!!!

4. பின்னூட்டக் கயமைத்தனம் நெறய செய்யுங்கள் : அதான், 'நன்றி', 'மறுபடியும் நன்றி', 'ஆ, சொல்ல மறந்துருச்சு', 'வாங்க, வாங்க' போன்றவை !!! ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் தனித்தனியா (டைம் கேப் விட்டு) நன்றி சொல்லுங்க ! அதே மாதிரி, டைம் கேப் விட்டு, உங்களுக்கு வந்த பின்னூட்டங்களை ஒவ்வொண்ணா பப்ளிஷ் பண்ணனும், புரியுதா ??? அப்ப தான், மறுமொழியப்பட்ட ஆக்கங்கள் பகுதியை நீங்க ஆதிக்கம் பண்ணலாம் ;-)

5. நடுநிலையோடு ஒரு பிரச்சினையின் இரு பக்கங்களையும் ஆய்ந்து, மறந்தும் கூட ஒரு பதிவு போட்டு விடாதீர்கள். அதே போல், எதிராளி சொல்வதில் ஏதாவது சங்கதி உள்ளதா என்றெல்லாம் பார்த்து டைம் வேஸ்ட் செய்யாதீங்க ! Chances are, உங்களை யாரும் சீந்த மாட்டார்கள் !!! ஒரு பக்கத்தை பிடித்துக் கொண்டு தொங்குவது தான் உங்களுக்கு celebrity status தரும் ;-)

6. மேலே சொன்னவை எதுவும் (அதிக பின்னூட்டங்கள் பெற!) வொர்க் அவுட் ஆகலேன்னா, நேரா டோண்டுவின் ஏதாவது ஒரு பதிவுக்குப் போய் 'நல்ல பதிவு' ன்னு மட்டும் கமெண்ட் போடுங்க, அவ்வளவு தான், நீங்களே நினைச்சு பார்க்காத அளவுக்கு, டோண்டுவின் 'நெருங்கிய நண்பர்' உங்களுடைய எல்லா பதிவுகளிலும், பின்னூட்ட மழை பொழிவார் ;-) வாழ்த்தி, நெறய தனிமடல்களும் அனுப்புவார் :)

இந்த பதிவுக்கு, + அல்லது -, ஏதோ ஒண்ணு குத்துங்க, ஒங்க இஷ்டப்படி :)
என்ன, ஜோதியிலே ஐக்கியமாகத் தான் இந்த பதிவே :)

என்றென்றும் அன்புடன்
பாலா
***********************************

Tuesday, August 15, 2006

சிதம்பரத் தீர்ப்பும் குட்டிக் கதையும்

சிதம்பரம் கோயிலில் திருச்சிற்றம்பலத்தில் ஆறுமுகச்சாமி "தமிழில்" சைவ திருப்பாடல்கள் பாடுவதற்கு எதிராக தீட்சிதர்கள் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, இடைக்கால தடையுத்தரவை நீதிமன்றம் வழங்கியது. இத்தீர்ப்பு குறித்து நண்பர் ஒருவரின் பதிவு அளித்த ஊக்கத்தின் விளைவே இக்குட்டிக்கதைப் பதிவு !

ஒரு மாணவன் தேர்வுக்கு வேண்டி, பசுமாடு பற்றி விளக்கமாக இவ்வாறாகப் படித்தான்,

1. பசுவிற்காக மற்றொரு தமிழ்ச்சொல் 'ஆ'

2. பசு புல், வைக்கோல் போன்றவற்றை உண்டு மனிதர்களுக்கு இன்றியமையாத உணவாகிய பாலைத் தருகிறது.

3. பசு நான்கு கால்களும், இரண்டு கொம்புகளும் உடையது, சாதுவான பிராணியும் கூட !

4. பசுவின் பாலிலிருந்து உருவாகும் நெய், தயிர் போன்றவை சுவையாகவும், ஆரோக்கியம் தருபவையாகவும் உள்ளன.

5. பசுவை இந்துக்கள் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

6. அதனால், பொதுவாக, இந்துக்கள் பசு மாட்டிறைச்சியை உண்பதில்லை

7. புதுமனை புகுவிழாவிற்கு பசு கூட்டி வரப்பட்டு அதற்கு பூசை செய்யப்படுகிறது.

இப்படியாக, பசுவைப் பற்றிய (பலர் அறிந்த, அறியாத!) பலப்பல விஷயங்களை நெட்டுரு போட்டு விட்டு, தேர்வுக்குச் சென்ற அம்மாணவனுக்கு பெரிய அதிர்ச்சி ! கேள்வித் தாளில் தென்னை பற்றி கட்டுரை எழுதுமாறு கேட்கப்பட்டிருந்தது ! சற்றே யோசித்த அந்த 'புத்திசாலி' மாணவன், கிடுகிடுவென்று பசுவைப் பற்றி தான் படித்து வைத்திருந்ததை ஒன்று விடாமல் எழுதி விட்டு, முத்தாய்ப்பாக, "அத்தகைய சிறப்புகளை பெற்ற பசுவானது, அழகான தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்தது!" என்று கட்டுரையை நிறைவு செய்தான் !

ஆக, பசுவைப் பற்றி தனக்குத் தெரிந்ததை எழுதிய மாதிரியும் ஆயிற்று, தென்னையைப் பற்றிய கட்டுரை எழுதிய திருப்தியும் ஏற்பட்டது அம்மாணவனுக்கு !!! மாணவனின் சமயோஜிதத்தையும், கெட்டிக்காரத்தனத்தையும் வியந்து பாராட்டி, ஆசிரியர் அக்கட்டுரைக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கினார் ! இன்ன பிறரும் அவனைப் பாராட்டினார்கள் !

பி.கு: குட்டிக்கதையை எழுதி முடித்து விட்டு ஏதோ ஒன்று எழுத நினைத்தது மறந்து விட்டதே என்று நினைத்தேன் ! யோசித்தேன், அது இது தான் .... அம்மாணவனின் பெயர் 'அம்பேத்கார்' !!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, July 30, 2005

கலகலகல --- 8 வரிக் கவிதை மாதிரி !

பா.ம.க எதிர்ப்பென எத்தனை நாள் ஜல்லியடிப்பீர் நீங்கள் !
திரையொளித் தலைவனெனெ எந்நேரமும் ஜல்லியடிப்போம் நாங்கள் !
நிழலெது நிஜமெது ..அறியாத் தமிழர்கள் என்றும் எள்ளுவோம் நாங்கள் !

திருமாவின் சிங்கப்பூர் பயணம் ..லூஸ்மோகனின் கோயம்பேடு பயணம்
-- ஜாலிக்கு எழுதினால், 'என்ன கொழுப்பு' என்று பாய்வோம் நாங்கள் !

அன்புமணியின் அரசியல் சாதனை, பெருமை பேசுவோம் நாங்கள் !
தார் பூச்சு ..தில்லி ..ஆங்கிலப்பள்ளி ..என்ன இப்படி என்றால்
ஐயோ, ஊடக வன்முறை என்று கூப்பாடு போடுவோம் நாங்கள் !



பின்குறிப்பு:

இது ஒரு ஜாலி (ஜல்லி அல்ல!) கவிதை(யா?) முயற்சி !
மேலும், இது Secularism குறித்த கவிதையும் அல்ல :)

குறிவைத்து எழுதவில்லை என்றும் சொல்ல முடியவில்லை !
ஆனால், நிச்சயமாக யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை.
படித்து விட்டு மறந்து விடவும் :)

Monday, July 25, 2005

லகலகலக - Analysis of Original Risk Analysis

பிளஸ் பாயிண்ட்

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு (சொந்த தயாரிப்புனா பல பிரச்சினைகள் வருமே) --- 2%

ஏற்கனவே இரண்டு மொழிகளில் மெகா ஹிட்டான மகா பாதுகாப்பான கதை - 5%

அரசியல் தலைவரிடம் சமரசம் செய்து கொண்டது --- 0%

சமரசத்திற்காக பஞ்(சர்)ச் டயலாக் பேசாதது --- 0.5%

சமரசத்திற்காக அரசியலை தாக்கும் வசனங்களை வைக்காமல் பாதுகாப்பான வசனங்கள் வைத்தது --- 0.5%

சமரசத்திற்காக ஸ்டைலாக புகை பிடிக்கும், தண்ணியடிக்கும் காட்சிகள் வைக்காதது --- 5% (ரசிகர்கள் நலனை மனதில் வைத்ததால் !)

20 வயது கதாநாயகி --- 2%

ஜோதிகாவின் முட்டை கண் மற்றும் நடிப்பு --- 6%

நகைச்சுவை புயல் --- 4%

நாயகனுக்காக கதை என்பதை கதைக்காக நாயகன் என்ற வியூகம் --- 2%

திரைவெளிச்சத்திலே தலைவனைத் தேடும் தமிழர்கள் --- 0.5%

சிலர் துர்நாற்றம் மிக்க இடங்களில்(!) தலைவனைத் தேடுகிறார்கள். ஜனநாயகத்தில் தலைவனை எங்கு வேண்டுமானாலும் தேடிக் கண்டுபிடிக்க / தேர்ந்தெடுக்க அவரவருக்கு உரிமை உண்டு தானே!!

நிழலுக்கும் நிசத்துக்கும் வித்தியாசம் தெரியாத தமிழர்கள் --- 0%

மிக நிச்சயமாக, நிழலுக்கும் நிசத்துக்கும் வித்தியாசம் தெரிந்தவர்களாகவே தமிழர்களை கருதுகிறேன் ! நிசத்தில் சிலர் அடிக்கும் கோமாளித்தனங்களையும், லூட்டியையும் கண்டு நொந்து நூலாகி, நிழலில் சற்று நேரம் அதை மறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள் !!! அதில், தவறொன்றும் இல்லை.

மற்றும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் --- நூறிலிருந்து மேலே குறிப்பிட்டுள்ளவைகளின் சதவிகிதங்களை கழித்துப் பார்த்தால் சுலபமாக கண்டுபிடித்து விடலாமே :) எங்கே, கணித்துச் சொல்லுங்க, பார்க்கலாம்! ரஜினியின் 'பிளஸ் பாயிண்ட் சதவிகித மதிப்பை' முதலில் பின்னூட்டுபவருக்கு, ஒரு பரிசு காத்திருக்கிறது :)



மைனஸ் பாயிண்ட்

படத்தை ஹிட் ஆக்கியே தீரவெண்டுமென புகுத்தப்பட்ட இரட்டை அர்த்த நகைச்சுவைகள்
---- சரி தான்! (என் மனைவியும் இதை மைனஸ் பாயிண்டாக குறிப்பிட்டார், so accepted ;-))))) ஆனால், அதற்கும் ஹிட்டுக்கும் சம்மந்தம் இருப்பதாகத் தோன்றவில்லை.

மற்றவைகள் பல பதிவுகளில் விமர்சிக்கப்பட்டு விட்டது

கோபி என் பதிவில் பின்னூட்டியது, உங்களுக்காக, REPEAT .....
*****************************
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாய் (1933 முதல் 2005 வரை) உலகம் முழுதும் 156 திரையரங்குகளில் 100வது நாள்.

தனது சாதனையை தானே தகர்த்துள்ளார் ரஜினி ( முந்தய சாதனை படையப்பா 139 திரையரங்குகளில் 100வது நாள்)

ஆனால் ஒரு திரைப்படத்தை ரசிகர்களால் மட்டுமே 100 நாட்கள் கடந்து ஓட்ட முடியாது. பொது மக்களும் Repeated Audience என்று சொல்லக் கூடிய சாதாரண மக்களும்தான் இந்த வெற்றிக்கு முழு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை
********************************

பின்குறிப்பு:

சை... கடைசியில் என்னையும் 'லகலகலக' பற்றி analysis பண்ண வைத்து விட்டார்களே .... தேவுடா, தேவுடா ....

இப்பதிவின் trend-ஐ பின்பற்றி இன்னும் சிலர் பிளஸ் பாயிண்ட்டுகளுக்கு தப்பு தப்பாக(!) சதவிகித மதிப்பு போடுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, June 15, 2005

புது வலைப்பதிவர்க்கு TOP 10 HOT TOPICS !

நீங்கள் தமிழ் வலைப்பதிவுகள் வாயிலாக உலகப் பிரசித்தி பெறவும், உங்கள் பதிவுகள் கவனிக்கப்படவும், தங்களுக்கு அதிக வாசகர்கள் மற்றும் பின்னூட்டங்கள் கிடைக்கவும், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஒன்றை பற்றி உங்களது கருத்துக்களை எழுதுவது தான் !!! நீங்கள் துரிதமாக பிரபலமடைய / புகழ் பெற (15 நிமிடம் அல்ல!) இதுவே சிறந்த வழி என்று தெளிவது அவசியம் :)

10. கலாச்சார சீரழிவு மற்றும் நவீனப் பெண்ணியம்
9. இஸ்ரேல் - பாலஸ்தீனிய பிரச்சினை
8. தமிழ் குடிதாங்கிகளின் செயல்பாடுகள் ... மொழிப்போர் கலாட்டா
7. தினமலர் ஆதரவு அல்லது எதிர்ப்பு
6. ரோசாவசந்த் / டோண்டு / PKS அவர்களின் ஏதாவது ஒரு பதிவின் பின்னூட்டக் களத்தில், ஒரு நிலைப்பாட்டை எடுத்து, படு காட்டமாக விவாதம் செய்வது !!!
5. தமிழக வாரிசு (பா.ம.க, தி.மு.க) அரசியல் !
4. ரஜினி குறித்து விமர்சனம்
3. பெரியார் குறித்து விமர்சனம்
2. பழம் / நவ பார்ப்பனீயம் குறித்த அலசல்
1. விடுதலைப்புலிகள் எதிர்ப்பு


எச்சரிக்கை: மேற்கூறியவற்றை குறித்து எழுதுவதற்கு முன், அவை பற்றி ஓரளவு படித்துத் தெளிவது நல்லது !!! இல்லையெனில் Subject Experts உங்களை பந்தாடி விடுவார்கள் !!!

DISCLAIMER: இந்த தலைப்புகளை வைத்து நீங்கள் எழுதுவதால் உங்களுக்கு ஏற்படக்கூடிய மனஉளைச்சலுக்கோ, இன்னபிற உபாதைகளுக்கோ, சங்கடங்களுக்கோ(!) நீங்களே பொறுப்பாவீர்கள். உதாரணமாக, அனாமதேயங்கள் வசை பாடலாம், உங்கள் பெயரிலேயே போலிகள் பல பதிவுகளில் பின்னூட்டி பெயரைக் கெடுக்கலாம் !!!

Anyway, Try your luck and ALL THE BEST ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, June 10, 2005

நாட்டாமை, தலைப்பை மாத்தி வை !!!

கார்த்திக்கின் இந்தப் பதிவு தந்த உற்சாகத்தில், நமது வலைப்பதிவர் சிலரின் தலைப்புகளை மாற்றினால் எப்படி இருக்கும் என்று விபரீத கற்பனை செய்ததன் விளைவு கீழுள்ளவை.
யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் :)
சும்மா ஒரு ஜாலிக்குத் தான் !!!

முதலில் தமிழ்மணத் தலைவரிடமிருந்து தொடங்குகிறேன் !

காசி --- சித்தூர்க்காரனின் சிந்தனைக் குதறல்கள் அல்லது சித்தூர்க்காரனின் சிதறிய சிந்தனைகள்
தேசிகன் --- தேசிகன் வலைப்பதிவுக்கு வரலேன்னா ஜாக்கிரதை !
கார்த்திக் --- karthik's EVERYTHING is CLOGS !
ரோசாவசந்த் --- ஒரு குட்டி பூர்ஷ்வாவின் சண்டையும், சச்சரவும் சில செருப்படிகளும்
டோண்டு ராகவன் ---- Dondu's 'DONTS' ONLY
ஐகராஸ் பிரகாஷ் --- Prakash's "CHRONIC"les
அல்வாசிட்டி விஜய் --- அடிச்சுக் கொல்லு !
மூக்கு சுந்தர் --- என் கோக்குமாக்கு
தங்கமணி --- E(n) அலறல்
மாண்ட்ரீசர் --- விக்கல்
ராம்கி --- சில்லுண்டியின் பெருங்குழப்பங்கள்
மாயவரத்தான் --- ஆயிரம் ஆனாலும் நக்கல் போகாது !!! (அல்லது Narrow vision!)
இரவிக்குமார் --- நீங்கள் கேட்காதவை !!!
காஞ்சி பிலிம்ஸ் --- பாஞ்சிக் கடி !
ஆச்சி மகன் ---- சுற்றத்தின் கொடுமை
வந்தியத்தேவன் --- தொடரும் வம்படி !!!
என்றென்றும் அன்புடன் பாலா ---- ????????????????????


என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, May 21, 2005

தேசிகனுக்கு ஒரு கடிதம் !!!

Pl. see http://desikann.blogspot.com/2005/05/blog-post_19.html
and then READ what is written below !!!

Dear Mr. Desikan,

We are pleased to inform you that review of your performance for the period from 19th May 2004 to 18th May 2005 has been completed and your services with தமிழ் வலைப்பதிவுலகம் through தமிழ்மணம், are confirmed herewith as SENIOR LEAD பதிவர்.

It has been extraordinary on your part that you could complete one year in this chaotic organization so full of politics, in-fighting, groupism but you will surely agree that the quality of deliverables (including yours) from OUR organization have mostly been excellent.

You have been confirmed because you weathered the storm successfully. There is no need to remind you how much our organization has grown in the last one year and how many bright and motivated persons have joined us.

Please accept our heartiest congratulations on your confirmation. We hope that your enthusiasm and zeal increase in the coming years despite the fact that your compensation package remains the same !!!

Wishing you all the very best.

Yours sincerely,

For தமிழ் வலைப்பதிவுலகம் through தமிழ்மணம்
(on behalf of காசி & மதி)

என்றென்றும் அன்புடன் பாலா
(Honorary ஒருங்கிணைப்பாளர்)


(யாரும் நமக்கு எந்த போஸ்ட்டும் கொடுக்காததனாலே, நாமே ஒரு போஸ்ட்டை உருவாக்கிக்கணும் இல்லயா :))
நாமளே 1 வருடம் complete பண்ணல. சீனியருக்கெல்லாம்
confirmation லெட்டர் நாம தரது கொஞ்சம் ஜாஸ்தி தான் ! என்ன பண்றது ?

Sunday, April 10, 2005

அலுவலக வழிபாட்டுப் பாடல்!!

ஆண்டவரே,

என்னால் மாற்ற முடியாத விடயங்களை ஒப்புக் கொள்ள வல்ல மன அமைதியையும்,

என்னால் ஒப்புக் கொள்ள இயலா விடயங்களை மாற்ற வல்ல மனத்திடத்தையும்,

என்னை கடுப்பேற்றும் மாந்தரின் சிற்றறிவுக்கு எட்டும் வண்ணம் விளக்கம் தர வல்ல ஞானத்தையும்

நீவிர் வழங்குவீராக!

அதோடு, நான் எவரெவரின் பாதங்களை இன்று மிதிக்கிறேன் என்பதில் கவனமாக இருக்க உதவுவீராக!

ஏனெனில், அப்பாதங்களுடன் இணைந்த பின்புறங்களை நாளை நான் முத்தமிட வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம்!!!

அலுவலில் என்னை 100% , அதாவது,
திங்கள் 12%,
செவ்வாய் 23%,
புதன் 40%,
வியாழன் 20%,
வெள்ளி 5% என்ற விகிதத்தில்,

முழுமனதுடன் ஈடுபடுத்திக் கொள்வதற்கான வல்லமையை தருவீராக!

இறுதியாக, அலுவலகத்தில் நான் சந்திக்க நேரிடும் கடினமான தருணங்களில்,
ஒருவரிடம் முகம் சுளிக்க 42 தசைகளையும், நடுவிரலை காட்ட 4 தசைகளை மட்டுமே
இயக்க வேண்டியிருப்பதன் அவசியத்தை நினைவில் கொள்ள துணையிருப்பீராக!

சரி, சரி, படிச்சது போறும்! ஆபிஸ்லே வேலயைப் பாருங்க!
போய்யா .... போ ('சதா' ஸ்டைல்!) !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, April 05, 2005

அவள் - அவன் - டைரி

அவளது நாட்குறிப்பிலிருந்து

ஞாயிறு மாலையிலிருந்து அவர் நடத்தை சற்று வினோதமாக இருந்தது. என் தோழிகளுடன் நாள் முழுதும் ஷாப்பிங் போய்விட்டு மாலையில் அவரை மதுரா ஹோட்டலில் டின்னருக்கு சந்திப்பதாகத் தான் ஏற்பாடு. அதற்கு சற்று லேட்டாகச் சென்றதால் தான் அப்படி இருக்கிறாரோ என நினைத்து மன்னிப்பு கேட்டபோது, 'அதெல்லாம் ஒன்றுமில்லை!' என்றார்.

உணவருந்தும்போது, ஏதோ சிந்தனை வயப்பட்டிருந்தார். ஒற்றை வார்த்தைகளில் ஏதோ பேசினார். "சரி வாருங்கள், கடற்கரை சென்று தனிமையில் பேசலாம்" என்றேன். வந்தார். எங்களுக்குள் உரையாடல் எதுவும் நிகழவில்லை! நான் என் தோழிகளுடன் நாள் முழுதும் ஊர் சுற்றியது குறித்து அவருக்கு கோபமோ என்ற நினைப்பில். " என் மேல் ஏதாவது மன வருத்தமா?" என வினவினேன். மறுபடியும், "அதெல்லாம் ஒன்றுமில்லை" என்றார்.

காரில் வீட்டுக்குப் போகும் வழியில் அவரிடம், "நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்!" என்று தோளில் சாய்ந்து சொன்னதற்கு, புன்னகை பூத்தார். "நானும் கூடத் தான்!" என்று சொல்வார் என எதிர்பார்த்து ஏமாந்தேன்!!! என்னவோ என்னை விட்டு அவர் விலகிச் செல்வது போலத் தோன்றியது. நான் அருகில் இருப்பதையே அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை!

வீடு வந்தவுடன் டிவி பார்க்கத் துவங்கினார். அருகில் இருந்தபோதே அவர் என்னை விட்டு மிகத் தொலைவு சென்று விட்டது போன்ற ஓர் உணர்வு!!! மிகுந்த மன அழுத்தத்துடன் படுக்கையறை சென்றேன். சற்று நேரம் கழித்து அவரும் வந்து அருகில் படுத்துக் கொண்டார்.

இதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது என்ற நிலையில் இருந்த நான், அவருடன் மனம் விட்டுப் பேசி விடுவது என்ற முடிவுக்கு வந்தபோது அவர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்! தூக்கம் வரும் வரை நிறைய அழுதேன்! அவர் தன் மனதில் வேறொருத்தியை நினைத்துக் கொண்டிருப்பதாக உறுதியாகத் தோன்றியது!

என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்! விடிவு வரும் என்ற நம்பிக்கையும் இல்லை!!!

*********************************************

அவனது நாட்குறிப்பிலிருந்து

இன்று பெங்களூர் டெஸ்ட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்று விட்டது! என்ன ஒரு கேவலமான தோல்வி!?!

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, March 01, 2005

மனைவிகளைப் பற்றி சில சங்கதிகள்!

என் மனைவி கலங்கடிக்கும் வண்ணம் உடுத்துவாள். அவள் சமைப்பதும் ஏறக்குறைய அப்படித் தான் இருக்கும்!
--- ஹென்னி யங்மேன்

என் மனைவியும் நானும் 20 ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். பின்னர் சந்தித்தோம்!
--- ராட்னி டேஞ்சர்·பீல்ட்

ஒரு நல்ல மனைவி தன் கணவனை நிச்சயம் மன்னித்து விடுகிறாள், அவள் தவறு செய்யும்போது!
--- மில்டன் பெர்ல்

ஒரு நீதிபதி முன்னிலையில் என் திருமணம் நடந்தது. அச்சமயம் நான் உணரவில்லை ஒரு ஜூரியை அழைத்திருக்க வேண்டும் என்பதை!
--- ஜார்ஜ் பர்ன்ஸ்

ஒரு மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வின் ரகசியம், ரகசியமாகவே இன்று வரை இருந்து வருகிறது!

நான் என் மனைவிக்கு ஒரு புதிய காரை பரிசாக வழங்கினேன். சற்று நேரத்தில் என்னை தொலைபேசியில் அழைத்த அவள், கார்பரேட்டரில் தண்ணீர் இருப்பதாகக் கூறினாள். நான் கார் எங்கே என வினவியதற்கு, அவள் அது ஏரியில் இருப்பதாக பதிலுரைத்தாள்!!!

--- ஹென்னி யங்மேன்

மனதில் கோபத்தோடு, உறங்கச் செல்லாதீர்கள்! விழித்திருந்து சண்டை போடுவது எவ்வளவோ மேல்!!!
--- ·பில்லிஸ் டில்லர்

X: என் மனைவி ஒரு தேவதை!
Y: நீ அதிர்ஷ்டக்காரன்! என் மனைவி இன்னும் உயிருடன் இருக்கிறாள்!

ஒருவர் தனது மனைவியின் பிறந்த நாளை எந்த சூழ்நிலையிலும் மறக்காமல் இருக்க ஒரே சிறந்த வழி, அதை ஒரே ஒரு முறை மறந்து விடுவது தான்!!!

திருமணத்தால் ஏற்படும் சிறந்த விஷயங்களில் ஒன்று என நான் கருதுவது, ஒரு கணவனாகவும், தந்தையாகவும் சொல்ல நினைப்பவற்றை நான், என் வீட்டில், வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்ல முடிகிறது. என்ன, யாரும் அவற்றுக்கு துளியும் காது கொடுப்பது கிடையாது!!!

திருமணம் என்பது புத்திசாலித்தனத்தின் மீதான கற்பனையின் வெற்றி!
இரண்டாவது திருமணம் என்பது அனுபவத்தின் மீதான நம்பிக்கையின் (!) வெற்றி!!

அமெரிக்காவில், திருமணமானவர்களில் 80 சதவிகிதம் பேர், தத்தம் மனைவிகளை ஏமாற்றுகின்றனர். மீதமுள்ளோர், ஐரோப்பா சென்று ஏமாற்றுகின்றனர்!!!

திருமணம் ஆகும் வரை உண்மையான மகிழ்ச்சி என்றால் என்னவென்பதை நான் உணரவில்லை! ஆன பின், காலம் கடந்து விட்டது!!!

கடந்த 18 மாதங்களாக நான் என் மனைவியுடன் பேசவில்லை! அவள் பேசும்போது குறுக்கிட எனக்கு விருப்பமில்லை என்பதால்!!!

என்றென்றும் அன்புடன்,
பாலா

Thursday, February 03, 2005

ஓ மரியா, ஓ மரியா!

மரியா என்ற மிக அழகிய லத்தீனப் பெண் ஜோஸ் என்ற வாலிபனைக் காதலித்தாள். அவனை மணமுடிக்க விரும்பி தன் தந்தையிடம் அச்சேதியை தெரிவித்தாள். அவரோ, "நீ அவனை மணக்க இயலாது. ஜோஸ் உனக்கு அண்ணன் முறை! ஆனால், உன் அம்மாவுக்கு இவ்விஷயம் தெரியாது. அவளிடம் இது குறித்து மூச்சு விடாதே!" என்றார்.

மரியாவும் ஒரு நல்ல மகளாக, ஜோஸை மறந்து விட்டு, ரிச்சர்ட் என்ற வாலிபனை மணக்க முடிவு செய்து, தந்தையிடம் கூறியபோது, அவர் மறுபடியும், "ஐயோ, நீ ரிச்சர்டையும் மணமுடிக்க இயலாது. அவனும் உனக்குச் சகோதரன் முறை தான். தயவு செய்து இதை உன் அம்மாவிடம் சொல்லி விடாதே!" என்று தடை விதித்தார்.

தன் தாயிடம் சென்று ஆலோசனை கேட்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்றுணர்ந்த மரியா, அவரிடம் சென்றாள். மகளின் பிரச்சினையை ஏற்கனவே அறிந்திருந்த மரியாவின் தாய், "என் கண்ணே! ஜோஸ் அல்லது ரிச்சர்ட், இவர்களில் யாரை மணந்தால் நீ மகிழ்ச்சி அடைவாயோ, அவனை மணந்து கொள்ளலாம்! ஏனெனில், உன் அப்பா, எனக்குத் தான் கணவர், நான் அறிந்தவரை உன்னுடன் அவருக்கு உறவுமுறை கிடையாது!!!" என்றார்.

Thursday, January 20, 2005

ஏன் மது அருந்தக் கூடாது?

நான் இதுவரை குடித்த பீர்களை எண்ணி சில சமயம் வெட்கம் அடைகிறேன். ஆனால், பீர் அருந்தும் குடுவையை (pitcher) பார்க்கும்போது, இந்த பீரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களும், அவர்களுடைய நம்பிக்கைகளும், கனவுகளும் நினைவுக்கு வந்து, நான் இந்த் பீரை அருந்தாவிடில், அவர்கள் வேலையை இழந்து விடுவார்களே என்ற கவலை ஏற்பட்டு விடுகிறது! "அத்தொழிலாளர்களின் கனவுகள் நனவுகளாக இந்த பீரை அருந்துவதை விடுத்து எனது கல்லீரலைப் பற்றி மட்டும் சுயநலமாக சிந்திப்பது தவறவல்லவா?" என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டு விடுகிறேன்!
--- Jack Handy


நான் குடிக்காதவர்களை கண்டு வருத்தமடைகிறேன்! அவர்கள் காலையில் விழிக்கும்போது எவ்விதம் உணருகிறார்களோ, அவ்விதமே நாள் முழுதும் உணரவிருப்பதைக் கண்டு!
--- Frank Sinatra


முட்டாள்களுடன் நேரம் செலவிடுவதற்காக ஒரு புத்திசாலி, சில சமயங்களில், அதிகம் குடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறான்!
--- Ernest Hemingway


குடிப்பதினால் உண்டாகும் கெடுதல்களைப் பற்றி படித்தவுடன், நான் படிப்பதையே நிறுத்தி விட்டேன்!
--- Henry Youngman


கடவுள் நம்மை விரும்புகிறார் என்பதற்கும், அவர் நாம் மகிழ்ச்சியாக இருக்க விழைகிறார் என்பதற்கும், மதுவே சிறந்த சாட்சி!
--- Benjamin Franklin


போதையுடன்,
ஒரு குடிகாரன்
(பாலா என்று தப்புக் கணக்கு போட வேண்டாம்!)

Friday, December 03, 2004

சிரித்ததற்காக ஒருவர் கைது!

இது போல் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? இங்கிலாந்தில் மேற்கூறியது குறித்த வழக்கொன்று நீதிமன்றத்துக்கு வந்தது!

ஒரு நிறைமாத கர்ப்பிணிப்பெண் பேருந்தில் பயணித்தபோது ஓர் இளைஞன் தன்னைப் பார்த்து புன்னகைப்பதைக் கண்டு, தன் நிலைமை குறித்து வெட்கமும், சற்றே அவமானமும் அடைந்தாள். அதனால், தன்னுடைய இருக்கையை விட்டு விலகி வேறிடத்தில் அமர முற்பட்டபோது, அவன் புன்னகை சிரிப்பானது! மறுபடியும், இன்னும் சற்று நகர்ந்து வேறொரு இருக்கைக்கு இடம் பெயர்ந்தாள். அவ்விளைஞனின் சிரிப்பு அப்போது அடக்க முடியாத இடிச்சிரிப்பு ஆனதால், அப்பெண் கோபமுற்று, காவலரை அழைத்து அவனை கைது செய்ய வைத்தாள்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவன் அவ்வாறு ஒரு பொது இடத்தில் நடந்து கொண்டதற்கான காரணத்தை வினவினார். இளைஞன் கூறிய பதில் கீழே:

" ஐயா, அந்த கர்ப்பிணிப்பேண் பேருந்தில் ஏறியபின் அமர்ந்த இருக்கைக்கு நேர்மேலே 'வெகு விரைவில் வருகிறார்கள், தங்கத்தூசு இரட்டையர்கள்!' என்ற விளம்பரம் காணப்பட்டது. அவள் அடுத்து 'வில்லியம்மின் குச்சி செய்த மாயம்' என்ற ஷேவிங்க் விளம்பரத்திற்குக் கீழ் அமர்ந்தபோது, எனக்கு சிரிப்பு வந்து விட்டது. மூன்றாம் முறை, அப்பெண் உட்கார்ந்த இருக்கைக்கு மேலிருந்த 'டன்லப் ரப்பர் இவ்விபத்து நிகழாமல் நிச்சயம் தடுத்திருக்கும்!' என்ற விளம்பர வாசகத்தை கண்டவுடன், தாள முடியாமல் நான் சிரித்த பெருஞ்சிரிப்பு என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது! "

அவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!!!


நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails